நடிகர் பிரபாஸ் ( actor prabhas )
பாகுபலி என்னும் மாபெரும் படத்தின் மூலம் நமது இந்திய சினிமாவின் அனைத்து ரசிகர்களின் முழு கவனத்தினையும் மக்கள் பக்கம் ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ். அந்த படமானது அவருக்கு கொடுத்த பிரபலமானது , அதன்பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் எல்லாமே பேன் இந்தியா ( Pan India ) படமாகவே இருக்கிறது என நம் எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு இருந்தாலும் சரியான வெற்றியானது தான் அவர் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கவில்லை, சமீபத்திலே நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியானது ஆதிபுருஷ் என்ற படம் அந்த அளவிற்கு வசூலை நடத்திவில்லை என தகவல் வெளியாகியுள்ளது, அதற்கு மாறாக மக்களிடையே நிறைய சர்ச்சைகளை சந்தித்து வருகிறதாம்.
அதிலும் நடிகர் பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ. 100 கோடிக்கு மேலாக சம்பளத்தினை வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இத்தாலியில் வில்லா
இவ்வாறு படத்துக்கு படம் பிரபாஸ் சம்பளத்தினை உயர்த்திக்கொண்டே வருவதால் நடிகர் பிரபாஸ் இத்தாலி நாட்டில் அதிக விலை கொடுத்து அங்கு வில்லா ஒன்றினை வாங்கி இருப்பதாக சில தகவல்கள் வந்தள்ளது.
இவர் இத்தாலியில் இவ்வாறு பல கோடிகளை கொட்டி வாங்கியுள்ள அந்த வில்லாவினை டூரிஸ்ட்களுக்கும், அங்குள்ள சில உள்ளூர் வாசிகளுக்கும் பிரபாஸ் வாடகைக்கு விட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.